இறக்கை
பறப்பதற்கே; தவழ்வதற்கு அல்ல என்ற அப்துல் கலாம் ஐயா அவர்களின் பொன்மொழியை சொல்லி தலைப்பினுக்கு பெருமை சேர்த்தே தொடங்குகிறேன் !
எங்கோ ஆகாய வெளியில்
சுதந்திரமாக சுற்றித் திரியும் பறவைகளை கண்டு நமக்கும்
சிறகுகள் இல்லையே என்று ஆதங்கப்படுபவர்கள்தான்
நாம் அனைவருமே ! இவ்வாறு பறவைகள் வானளவு
பறப்பதற்கு அதன் சிறகுகள் மட்டுமே
காரணம் என்று நாம் நினைத்தால்
அது சற்றே தவறுதான் ! ஆம்
. பறவைகள் அதன் மீதும் அதன்
சிறகின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையினால்
மட்டுமே உந்தப்பட்டு உயர உயர செல்கின்றன
! சிறகுள்ள பறவைகள் அனைத்தும் நினைத்த
உயரத்தை அடைய முடிவது இல்லை
! தன் சிறகின் மீது நம்பிக்கை
கொண்டுள்ள பறவைகள் மட்டுமே உயர
உயர பறந்து நினைத்த உயரத்தை
அடைகின்றன ! இதனை நம் வாழ்க்கையுடன்
எளிதாக பொருத்தி பார்க்க இயலும் ! சிறகுகளை
நல்ல பண்புகளின் அடையாளமாக கருதும் ஒவ்வொரு மனிதனும்
எட்டாத உயரத்தை எளிதாக எட்ட
முடியும் என்பதே இத்தலைப்பு கொண்டுள்ள மறைமுக விளக்கம் !
உழைப்பு,
உண்மை, உதவி, விடாமுயற்சி, தன்னம்பிக்கை,
விவேகம் உள்ளிட்ட அனைத்து சிறந்த பண்புகளுமே
மனிதனின் சிறகுகளை வலுவாக்கி அவர்களது இலக்கை நோக்கி பறக்க
பயணிக்க உதவுகிறது ! வெற்றி எனும் வசந்த
வெளியில் வட்டமிட்டு பறந்திடவே வேண்டும் நமக்கு மேற்கூறிய சிறந்த
பண்புச் சிறகுகள் ! சிறகு கொண்ட பறவையிடம்
முயற்சி கிடையாது எனில் உயரம் அடையாது.
அது போலவே மனிதன் தன்
திறமைகளை தன்னுள் மட்டும் வைத்துக்கொண்டு
வெளிப்படுத்தாவிடில் வெற்றி கிடையாது ! இவ்வெற்றியினை
அடைவதற்கு பல தடைகள் வரலாம்
. பல அவமானங்கள் வரலாம் . இந்த தடைகளையும் அவமானங்களையும்
கண்டு துவண்டுபோய் சிறகொடிந்த பறவையாக இல்லாமல் துளிர்த்து
எழுந்தால் வெற்றி வானில் பறந்து
கொண்டே இருக்கலாம் !
உயர உயர பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாகுமா என்ற பழமொழியை நாம்
அனைவரும் கேள்விப்பட்டிருப்போம் ! இந்த பழமொழியை நான்
இப்படித்தான் புரிந்து கொண்டிருக்கிறேன் ! பறந்து விரிந்த வானம்
பருந்துகளுக்கு மட்டுமல்ல சின்னஞ்சிறு குருவிகளுக்கும்தான் ! மேனியில் முளைத்த சிறகுகள் முடங்கி
விட கூடாது என்பதற்காக யார்
வேண்டுமானாலும் பறக்கலாம் . அது பருந்தாக இருந்தால்
என்ன ? சின்ன குருவியாக இருந்தால்
என்ன ? முயற்சி ஒன்றுதான் ! இதனை
மனித குலத்திற்கும் அடிப்படையாக வைத்து கொள்ளலாம் ! மனிதரில்
எவ்வகையிலும் ஏற்ற தாழ்வுகள் கிடையாது.
முயற்சி செய்வோர் முன்னர் வருவார் அவருக்கே
உலகம் சொந்தம் !
சிறகுகள் வேண்டும் உயரப் பறக்க |
சிறகுகள் வேண்டும் உயரப் பறக்க |
சிறகுகள் வேண்டும் உயரப் பறக்க |