Wednesday, June 20, 2018

மறைந்து கொள்ளத்தான் ஆசை


Want to Disappear
கோழிக்கும் ஆட்டுக்கும்

மறைந்து கொள்ளத்தான்
அலாதி ஆசை
மனிதப் பார்வையிலிருந்து
-             --- இன்று ஞாயிற்றுக்கிழமை

Want to Disappear

பக்கத்து வீட்டு பகுமானக்காரி



Prestige Woman
வெற்றிடம் நிரப்பிய வாடை காற்றானவள் நீ
வெறும் இடம் கூட இல்லாமல் செய்வது ஏனோ?

சோகம் போக்கி சொர்க்கமாக திகழ்ந்தவள் நீ
தாகத்துக்கு தண்ணீர் தர மறுப்பது ஏனோ?

பெற்றோரை பேணி பெண்ணாக வாழ்ந்தவள் நீ
அவர்கள் கண்ணீரை காண துடிப்பது ஏனோ?

என் நாணயம் மீதான நம்பிக்கையில் வந்தவள் நீ
பொண் நாணயங்களை மட்டும் நம்புவது ஏனோ?

வறுமையில் இன்பத்தை வரமாக அளித்தவள் நீ
துன்பத்தின் உச்சத்தை உச்சி முகர்வது ஏனோ?

காதலுக்கு உயிரூட்டிய சுவாசமடி நீ
கண் அசைவுக்கு ஆடவேண்டும் என்பது ஏனோ?

வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்தவள் நீ
சொத்துக்கு இல்லை கணம் பெருக்கு என்பது ஏனோ?

நீதான் என் உலகம் என்று சொல்லி மனைவியானவள் நீ
சாவுதான் ஒரே வழி போ என்பதும் ஏனோ?

இதற்காகத்தானே பக்கத்து வீட்டு பகுமானக்காரியிடம்
பழக வேண்டாம் என்று பலமுறை சொன்னேன்



*** பகுமானம் = பெரியதனம் , கவுரவம்