நண்பர்களுக்கு வணக்கம்
பல மாதங்களாகவே பாதயாத்திரையை பற்றி ஒரு நீண்ட பதிவை எழுத வேண்டும் என என் மனதில் தோன்றி கொண்டே இருந்தாலும் போதிய அவகாசம் இல்லாததால் தள்ளி போய்க்கொண்டுள்ளது. இப்போதைக்கு பழனி வாழ் எம்பெருமான் முருகனை பற்றி நான் எழுதிய கவிதை வரிகளை இங்கு பதிவிடுகிறேன். கூடிய விரைவில் பாதயாத்திரையை பற்றிய ஒரு விளக்கமான பதிவை தர முயல்கிறேன்.
கவிதையை பற்றிய உங்களது மேலான கருத்துக்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மறைந்திருந்தே நிறைந்திருக்கும் மாயவனே
கசடு கழித்து ஞானம் பெருக்கும் தூயவனே
பார்காணும் பகைமை முறிக்கும் கந்தனே
செந்தழல் பிழம்பாய் சீறும் சேந்தனே
தனிப்பெருந்தீரன் தரணியாளும் தண்டபாணியே
மூப்பெருங்குடி முத்தமிழின் சேயோனே
அப்பனுக்கும் அகத்தியருக்குமே ஓதிய குருபரனே
அகிலம்கற்க ஞானத்தின் வடிவான வேலவனே
மாந்தரின் மனக்குகை வேந்தனே
குகையிருள் அகற்றும் சுப்பிரமணியனே
குன்றா இளமை குமரனே
கண்நிறைக்கும் அழகு முருகனே
கடம்பனே காங்கேயனே கார்த்திகேயனே
தீவினை தீர்க்கும் திருமுகனே
நல்வழிநடத்தும் வழிபடுகடவுள் சரவணபவனே
கசடு கழித்து ஞானம் பெருக்கும் தூயவனே
பார்காணும் பகைமை முறிக்கும் கந்தனே
செந்தழல் பிழம்பாய் சீறும் சேந்தனே
தனிப்பெருந்தீரன் தரணியாளும் தண்டபாணியே
மூப்பெருங்குடி முத்தமிழின் சேயோனே
அப்பனுக்கும் அகத்தியருக்குமே ஓதிய குருபரனே
அகிலம்கற்க ஞானத்தின் வடிவான வேலவனே
மாந்தரின் மனக்குகை வேந்தனே
குகையிருள் அகற்றும் சுப்பிரமணியனே
குன்றா இளமை குமரனே
கண்நிறைக்கும் அழகு முருகனே
கடம்பனே காங்கேயனே கார்த்திகேயனே
தீவினை தீர்க்கும் திருமுகனே
நல்வழிநடத்தும் வழிபடுகடவுள் சரவணபவனே
உனையேந்தும் உள்ளத்திற்கு
உலகம் சிறியது உவகை பெரியது
உலகம் சிறியது உவகை பெரியது
நிதம் அறுபது நாழிகையும்
நின்னைச் சிந்தையிற் ஏந்தும்
நிற்கதியான எனைப் பக்குவனாக்க
நில்லாமல் நிந்தித்த லில்லாமல்
நின்னருள் புரிபவனே ஈசன் தந்த ஈவோனே !
நின்னைச் சிந்தையிற் ஏந்தும்
நிற்கதியான எனைப் பக்குவனாக்க
நில்லாமல் நிந்தித்த லில்லாமல்
நின்னருள் புரிபவனே ஈசன் தந்த ஈவோனே !
உனையேந்தும் உள்ளத்திற்கு
உலகம் சிறியது உவகை பெரியது
உலகம் சிறியது உவகை பெரியது
கல்நெஞ்சு கல்லாரும்
கடும்நஞ்சு எண்ணமுள்ளோரும்
உளமாற உள்ளம் மாற
ஊருக்கோர் முகமாக உறவன் ஆனவனே !
உழைத்தே களைத்தோரும்
உடற்பிணியால் சளைத்தோரும்
மிகுதி ஆற்றலுடன் மீண்டு வர
நம்பிக்கை எரியூட்டியாய் அகத்தினில் உதிப்பவனே !
கடும்நஞ்சு எண்ணமுள்ளோரும்
உளமாற உள்ளம் மாற
ஊருக்கோர் முகமாக உறவன் ஆனவனே !
உழைத்தே களைத்தோரும்
உடற்பிணியால் சளைத்தோரும்
மிகுதி ஆற்றலுடன் மீண்டு வர
நம்பிக்கை எரியூட்டியாய் அகத்தினில் உதிப்பவனே !
உனையேந்தும் உள்ளத்திற்கு
உலகம் சிறியது உவகை பெரியது
உலகம் சிறியது உவகை பெரியது
அல்லும் பகலும் அறம் தாங்கி
கல்லும் முள்ளும் பாதம் தாங்கி
அகமும் புறமும் இரண்டறக்கலந்து
அன்பும் அறிவும் ஒருமித்தோங்க
பழனிமலை பாலகனே உன்னை
பார்க்கவேண்டியே தவம்கிடந்து
அனுதினமும் உனைப்பாடி
அடியடியாய் நடைநடந்து
ஆவினன்குடி நோக்கி வாறோமய்யா !
கல்லும் முள்ளும் பாதம் தாங்கி
அகமும் புறமும் இரண்டறக்கலந்து
அன்பும் அறிவும் ஒருமித்தோங்க
பழனிமலை பாலகனே உன்னை
பார்க்கவேண்டியே தவம்கிடந்து
அனுதினமும் உனைப்பாடி
அடியடியாய் நடைநடந்து
ஆவினன்குடி நோக்கி வாறோமய்யா !
உனையேந்தும் உள்ளத்திற்கு
உலகம் சிறியது உவகை பெரியது
உலகம் சிறியது உவகை பெரியது
நிலையற்ற உலகம் அறி
நன்மை புரி சமநிலை தரி
வேண்டும் சுய ஒழுக்க நெறி
என உணர வைப்பது
அடையும் புகழ் அவனுக்குரியது
அஃதே முருகன் ஆவது !
நன்மை புரி சமநிலை தரி
வேண்டும் சுய ஒழுக்க நெறி
என உணர வைப்பது
அடையும் புகழ் அவனுக்குரியது
அஃதே முருகன் ஆவது !
முருகா ! முருகா !! முருகா !!!