Thursday, October 18, 2018

மகிழ்வான மலையேற்றம் 4 : சிவன் மலை

இப்பதிவினுக்குள் செல்வதற்கு முன்னால் மலையேற்றம் பற்றிய முன்னுரையை கீழ் உள்ள இணைப்பில் சென்று படித்து விட்டு வரவும். 


சிவன் மலைக்கு ஓரிரு முறை முன்னரே சென்று இருந்தாலும் நடை பயணம் மேற்கொண்ட இந்த முறைதான் சிறந்த அனுபவம் கிடைத்தது என்றால் மிகையல்ல. சிவன்மலை காங்கேயம் அருகில் அமைந்துள்ளது. சுப்ரமணிய சுவாமியாக முருகப்பெருமான் இங்கு குடிகொண்டுள்ளார். இம்மலைக்கோவில் 12ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாக நம்ப படுகிறது. 

வாகனத்தில் தனியாகவோ இல்லை உறவினருடனோ இதுவரை வந்தது போல் இல்லாமல் கொளுத்தும் வெயிலில் மாணவர்களுடன் உரையாடிக்கொண்டு பொடி நடையாக மலையேறி வந்து கோவிலை அடைந்தது உண்மையிலேயே மன திருப்தியை அளித்தது. எந்த மலைக்கோவிலாக இருந்தாலும் இது போல ஒரு குழுவாக சென்றால் அந்த பயணம் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் என்பது என் குறுகிய கால அனுபவ கருத்து. 

அகன்ற பரந்து விரிந்த கிளைகளை கொண்ட மரங்களை எங்கெல்லாம் காண்கின்றேனோ அப்பொழுதெல்லாம் ஒருவிதமான பரவச உணர்வும் மகிழ்வும் என்னை தொற்றி கொள்வதை என்னால் உணர முடிந்திருக்கிறது. அதற்கான காரணத்தை இன்றளவும் நான் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். புரிந்தபாடில்லை. ஆகவே இக்கோவிலில் கீழ் காணும் மரத்தை நான் படம் பிடித்ததில் வியப்பேதும் இல்லை. 

Pleasant Trekking : Sivan Temple Kangeyam

மகிழ்வான மலையேற்றம் 4 : சிவன் மலை

மகிழ்வான மலையேற்றம் 4 : சிவன் மலை

மகிழ்வான மலையேற்றம் 4 : சிவன் மலை