Sunday, July 15, 2018

மகிழ்வான மலையேற்றம் 1 : சென்னிமலை


பல சமயங்களில் படிப்பறிவை விட அனுபவ அறிவே வெற்றிக்கு வழி காண்பதில் முன் நின்று கைகொடுக்கும். இத்தகைய அனுபவ அறிவினை மலையேற்றம் மூலமாக ஓரளவு என்னால் பெற முடிந்தது. பெற்ற என் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். 

மலையேற்றம் என்பது மலையின் மீது ஏறுதலோ அல்லது நடப்பதோ மட்டும் அல்ல. இவைகளை தாண்டி பல விடயங்களை மலையேற்றத்தின் வாயிலாக நாம் கூர்ந்து கவனிக்கவும் கற்றுக் கொள்ளவும் வேண்டியுள்ளது. 

மலையேற்றம் பலருக்கு ஒரு நோக்கமாக இருக்கலாம்.

மலையேற்றம் பலருக்கு தங்களது அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அமையலாம். 

மலையேற்றம் பலருக்கு குறிக்கோளாக அமையலாம். 

மலையேற்றத்தை பலர் இலக்காக நிர்ணயிக்கலாம். 

மலையேற்றம் பலருக்கு சவாலாக இருக்கலாம். 

மலையேற்றம் பலருக்கு சிறந்த உடற்பயிற்சி நேரமாக இருக்கலாம். 

மலையேற்றம் பலருக்கு கொண்டாடும் நிகழ்வாக அமையலாம். 

மலையேற்றம் பலருக்கு புது நண்பர்களை கண்டறியும் இடமாக இருக்கலாம். 

மலையேற்றம் பலருக்கு ஒரு சிறந்த பயணமாக இருக்கலாம்.

மலையேற்றம் பலருக்கு அவர்தம் சந்ததியினரை இயற்கை அல்லது பசுமை விரும்பியாக ஆக்குவதற்கான முயற்சியாக இருக்கலாம்.

ஆக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறிப்பிடத்தகுந்த காரணங்கள் உண்டு மலையேற்றத்தை விரும்புவதற்கும் ஈடுபடுவதற்கும். காரணம் எதுவாக இருப்பினும் மலையேற்றத்தில் ஈடுபடுவோர் ஒவ்வொரு முறையும் ஒரு படிப்பினையை கற்று கொள்கின்றனர் என்பதுதான் நான் அறிந்த உண்மை. 

தன்னை உணர்ந்து கொள்வதற்கும் புதுப்பித்து கொள்வதற்கும் ஒரு வாய்ப்பாக அமைகிறது மலையேற்றம். மலையேற்றத்தின் வாயிலாக அனைத்து நல்ல பழக்கங்களையும் ஒருசேர கற்றுக்கொண்டு தொடரமுடியும். ஆரோக்கியமான கொண்டாட்டத்திற்கு வித்திடும் பொழுதுபோக்குகளில் முதன்மையானது மலையேற்றம்தான் என்பது நான் உணர்ந்த வெளிப்படுத்த விரும்பும் ஒரு செய்தி. 

மலையேற்றம் செய்வதற்கென்றே பிரத்யேகமான இடங்கள் உண்டு. உதாரணமாக இமயமலை, கொடைக்கானல் போன்ற இடங்களை கூறலாம். இது போன்ற புகழ் பெற்ற தொலைவில் உள்ள இடங்களை தேர்வு செய்யும்போது முன் கூட்டியே திட்டமிடுதல் அவசியம். குறிப்பாக மலையேற்றம் செய்வதற்கான பகுதி, நம்மை வழிநடுத்துவதற்கு ஏற்ற ஒரு வழிகாட்டி மற்றும் பயண அட்டவணை போன்றவை முன்கூட்டியே திட்டமிடப்படவேண்டியவை. 

விடுமுறை, உடல்திறன் மற்றும் பொருளாதார நிலையினை மனதில் வைத்து மலையேற்றம் செய்யும் பகுதியை நாம் தேர்ந்தெடுக்கலாம். மலையேற்றத்தில் பெரிய அளவில் நாட்டம் இல்லாதவர்கள் தங்களது பகுதிக்கு அருகில் உள்ள மலைக்கு சென்று மலையேற்றத்தில் ஈடுபட்டு நாட்டத்தை வரவழைக்க முயலலாம். நாம் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் நமக்கு தெரியாமலேயே பல மலையேற்ற பகுதிகள் இருந்ததை என் அனுபவத்தின் வாயிலாக உணர்ந்தேன். உங்கள் பகுதிக்கு அருகிலும் இதுபோல பல மலையேற்ற பகுதிகள் இருக்கும் தேடிப்பாருங்கள். 

எளிதான பாதையை விட கரடுமுரடான மிக நீண்ட மலையேற்ற பயணத்தை மேற்கொள்ளும்போது நமக்கு அது ஒரு சிறந்த அனுபவத்தை தரும். ஒரு நாள் பயணத்தை விடுத்து நெடுநாள் பயணத்தை விரும்புபவர்கள் தேவையான பொருட்களை தங்களுடன் எடுத்து செல்ல மறக்க கூடாது. 

2013 ஆம் ஆண்டு நந்தா பொறியியல் கல்லூரி தன்னாட்சி தகுதி பெற்று முதல் ஆண்டில் அடியெடுத்து வைத்தபொழுது முதுகலை பட்டப்படிப்பில் நானும் ஒரு மாணவனாக அடியெடுத்து வைத்தேன். தன்னாட்சி தகுதி பெற்ற பிறகு பல்வேறு சங்கங்களை தொடங்கி அதில் மாணவர்களை ஈடுபடுத்த தொடங்கியது கல்லூரி நிர்வாகம். இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்களை வழிநடத்தும் பொறுப்புடன் நாங்களும் மலையேற்றம் சங்கத்தில் சேர்ந்து செயல்பட தொடங்கினோம். 

முதன்முதலாக சென்னிமலைக்கு மலையேற்றத்துக்காக சென்றோம். சென்னிமலை - இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கைத்தறி தொழிலுக்கும் முருகன் கோவிலுக்கும் பிரசித்தி பெற்றது சென்னிமலை. தனிப்பட்ட முறையில் பல முறை அங்கு ஆலய வழிபாட்டுக்காக சென்று இருந்தாலும் கூட இது ஒரு புது அனுபவமாக எனக்கு இருந்தது. 

உடலுக்கு வேலை கொடுப்பது, நண்பர்களுடன் அரட்டையடிப்பது, 
நல்ல காற்றை சுவாசிப்பது, பசுமையை ரசிப்பது என மலையேற்றத்துக்கே உண்டான குணாதியசங்களுடன் சேர்த்து நாங்கள் சற்றும் எதிர்பாராத வகையில் மலையேற்றத்தின் இடையில் கடும் வெயிலும் கடும் மழையும் இரண்டறக்கலந்து எங்கள் கண் நிறைந்தது, மழையில் நனைந்து மனது குளிர்ந்து மலை உச்சியை எட்டியபொழுது முருகப்பெருமானுக்கு செய்து கொண்டிருந்த 12 மணி பூஜையை கூட்டமே இல்லாமல் காணக்கிடைத்தது என மன நிறைவாக அமைந்தது சென்னிமலை மலையேற்றம். இதன் பிறகு நான் பல மலையேற்றங்களில் ஈடுபட்டிருந்தாலும் இயற்கையுடன் இணைந்து மேற்கொண்ட இந்த சென்னிமலை மலையேற்றம்தான் சிறந்த ஒன்றாக என் மனதில் பதிந்துள்ளது இந்த பதிவினை இடும் வரைக்கும். 

நான் சென்ற மலையேற்றங்களில் எடுத்த புகைப்படங்களை இவ்வலைப்பதிவில் 'மகிழ்வான மலையேற்றம்' என்ற தலைப்பில் உள்ள இடுகைகளில் நீங்கள் காண முடியும். நீங்களும் நேரம் கிடைக்கும்பொழுது மலையேற்றம் போன்ற பயனுள்ள செயல்களில் உங்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

மலையேற்றம் 1 : சென்னிமலை

No comments:

Post a Comment