இப்பதிவினுக்குள் செல்வதற்கு முன்னால் மலையேற்றம் பற்றிய முன்னுரையை கீழ் உள்ள இணைப்பில் சென்று படித்து விட்டு வரவும்.
மூணார் - பெரும்பாலான மக்களுக்கு பசுமையாக இந்த பெயர் நினைவில் பதிந்து இருக்கும். கேரளா மாநிலத்தில் அழகிய மலைப்பிரதேசத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ள மூணார் சுற்றுலா வாசிகளை தன் பக்கம் ஈர்க்கும் வல்லமை பெற்றது. கல்லூரி மாணவர்களுக்கும் சரி வெளிநாட்டவருக்கும் சரி மற்றவர்களுக்கும் சரி கேரளா என்றவுடன் முதலில் ஞாபகத்துக்கு வருவது மூணார் மட்டும்தான்.
அப்படி என்ன மூணாரின் சிறப்பு என்பதை உணரும் வாய்ப்பை அளித்தது இந்த மலையேற்றம். இதன் பிறகு இரண்டு மூன்று முறை இங்கு வர வாய்ப்பு அமைந்து கூடுதல் அனுபவங்களும் பின்னர் கிடைத்தன.
முதல் சிறப்பாக தட்ப வெட்ப நிலையை நாம் குறிப்பிட முடியும். எங்கு பார்த்தாலும் பசுமையை காணக்கூடிய நிலையை இன்றளவும் கொண்டுள்ள கேரளா மாநிலத்தில் நாம் விரும்பும் தட்பவெட்ப நிலையே எப்பொழுதும் நிலவும் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். அது போலவே மிதமான வெயிலும் மிதமான குளிரும் இணைந்து வருடும் இடமாக திகழ்கிறது இந்த மூணார். அனைத்து தர வயதினரும் விரும்பும் இந்த மூணார் மிக அதிக அளவில் கவனத்தை ஈர்ப்பது புது மண தம்பதிகளைத்தான். உள் நாட்டினரை விட மிக அதிக அளவில் வெளிநாட்டினர் வந்து மூணாரின் அழகை ரசித்து செல்கின்றனர்.
ஒவ்வொரு முறை பயணத்தின் போதும், மூணார் செல்லும் வழிப்பாதையில் கிடைக்கும் அனுபவங்கள் இன்னும் சிறப்பாக அமையும். இரவு நேர பயணத்தில் அடர்ந்த இருட்டிற்குள் பாயும் வாகனத்தின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் எதாவது விலங்கு தென்பட்டு விடாத என மாணவர்கள் கண் இமைக்காமல் பார்த்து வருவர். அவ்வப்போது யானை, கரடி, காட்டெருமை, சிறுத்தை என இவைகளெல்லாம் காட்சி தந்து மாணவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தியாக்கும். அப்படி ஒரு சமயம் ஒரு குரங்கு செய்த சேட்டையையும் தன் குழந்தை குரங்கிடம் காட்டிய அன்பையும் புகைப்படம் எடுத்தோம். (அதனை நீங்கள் கீழே காணலாம்). விலங்குகளை பார்த்த மகிழ்ச்சியினை மற்றவருடன் பகிர்ந்து கொண்டும் அடுத்த விலங்கினை எப்பொழுது பார்ப்போம் என்ற ஏக்கத்துடனும் கழியும் அந்த இரவு நேர பயணம்.
மலைப்பாதை வழிதோறும் காணப்படும் தாவரத்தின் அல்லது மரங்களின் அறிவியல் பெயரோடு விளக்கங்களையும் உள்ளடிக்கிய தகவல் பலகை சுற்றுலா நேரத்தை இன்னும் சுவாரசியமாக்குகிறது சுற்றுலா விரும்பிகளுக்கு. இது போன்ற விளக்கங்களை ஏறெடுத்து கூட பாராமல் புகைப்படம் எடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தும் கூட்டமும் மிக அதிக அளவில் இருப்பதுதான் மிக மிக வேதனையிக்குரிய செய்தி.
வெளிநாட்டவருக்கு இயற்கையை ரசிக்க ஆர்வம் என்று சொன்னால் நம்மவர்களுக்கு அந்த வெளிநாட்டவர்களுடன் புகைப்படம் எடுப்பதில்தானே ஆர்வம். அந்த ஆர்வம் ஆசை எங்களை மட்டும் விட்டு வைக்குமா என்ன? எடுத்தோம் ஒரு சுய குழு புகைப்படம் (புகைப்படம் கீழே). அதில் ஒரு வெளிநாட்டவருடன் முகநூலில் நட்பாகி இன்றும் தொடர்வது ஆர்வத்தின் உச்சமோ இல்லை நாகரிகத்தின் புதுமையோ எனக்கு இன்னும் புரிந்த பாடில்லை. அனால் பரிச்சயமில்ல நட்பு இன்றும் தொடரத்தான் செய்கிறது.
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
Pleasant Trekking : Munnar Kerala |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
Pleasant Trekking : Munnar Kerala |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
Pleasant Trekking : Munnar Kerala |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
Pleasant Trekking : Munnar Kerala |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
Pleasant Trekking : Munnar Kerala |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
Pleasant Trekking : Munnar Kerala |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
Pleasant Trekking : Munnar Kerala |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |
மகிழ்வான மலையேற்றம் 5 : மூணார் கேரளா |