கருத்து கொள்தல்
கொண்ட கருத்தில் நிலை கொள்தல்
தவறெனில் திருத்தி பின் கருத்தில் மாறுதல்
இக்கருத்துகள் யாவையும் பரிமாறுதல்
மாற்றார் கருத்து புரிதல்
உடன்படின் உள்ளபடியே ஏற்றுக்கொள்தல்
தேவைப்படின் விளக்குதல்
விருப்பப்படின் விளக்கம் கூட்டுதல்
உடன்படாவிடின் பதில் கருத்தை பதிவு செய்தல்
நீட்சியாக கருத்து விவாதித்தல்
நீளும் நிலையில் கருத்து சமரசமாதல்
முடிவிலி எனில் மௌனித்திருத்தல்
---இவைகளிணைந்தே கருத்தழகுறும்
---இவைகளிணைந்தே கருத்தழகுறும்
தெளிவின்மை தரும் கருத்து குழப்பம்
உணர்ச்சி மிகுதியில் கருத்து மிகையாக்கல்
வசதிக்கேற்ப கருத்து திரித்தல்
ஒருதலை பட்சமாக கருத்து திணித்தல்
விவாதம் முற்றிய கருத்து மோதல்
அற்பத்தனமான கருத்து திருடல்
எல்லை மீறிய கருத்து சுதந்திரம்
---இவைகளற்றே கருத்து இரட்டிப்பழகுறும்
Follow Me @FACEBOOK !
No comments:
Post a Comment