Frozen Desire |
உறைந்து போன ஆசை !!
ஆசைப்பட்ட பொம்மை
ஆளுக்கொன்னு அப்பா வாங்கி தர
அடங்காத மனசு வந்து
அவனோட பொம்மைதான் வேணும்னு
அம்மாவிடம் அடம்பிடிக்க
நீயே இத வச்சுக்க
எனக்கு ஒன்னும் வேண்டாம்
என முகம் திருப்பி செல்லும்
ஒரே ஒரு சகோதரனோ சகோதரியோ
எனக்கும் இருந்திருந்தால் ........
உறைந்து போன ஆசை !!
வாயை புடுங்கி வசனம் பேசி
வாதம் செஞ்சு வம்புக்கு இழுத்து
அடிச்சு வச்சு ஆட்டம் போட்டு
அம்மாகிட்ட மாட்டி ஆயிரத்தெட்டு திட்டு வாங்கி
அப்பாகிட்ட அடிவாங்கி அங்கங்கே தழும்பாகி
விம்மி விம்மி நான் அழும்போது
பம்மி பம்மி என் பக்கம் வந்து
நீ என்ன அடிச்சதுக்கும்
அப்பா உன்ன அடிச்சதுக்கும்
சரியாய் போச்சு வாடா விளையாடலாம்
நீயே சொல்லு என்ன விளையாட்டுன்னு
என கம்மிய குரலில் காதில் கிசுகிசுக்கும்
ஒரே ஒரு சகோதரனோ சகோதிரியோ
எனக்கும் இருந்திருந்தால் ........
உறைந்து போன ஆசை !!
பள்ளிக்கூட பருவத்துல
பரிச்சையும் வரும்போது
பக்கத்துல உட்கார்ந்து
பக்குவமா எனக்கு சொல்லிகுடுத்து
பிறகு பாதிக்கு பாதி கூட இல்லாத
பெற்ற பயனில்லாத மதிப்பெண்ணை
பரிட்சை அட்டையில பார்த்துவிட்டு
பாரபட்சமே பார்க்காமல்
பரிசாக பக்கத்து வீட்டு பையன
பாராட்டி ஒப்பிட்டு
பல மடங்கு வீட்டில் பற்றவைத்து
பெற்றோர் என்னை கடிந்து கொள்ளும்போது
பாசாங்கு பண்ணாம
படிக்கிறப்ப ஒழுங்கா படிச்சாத்தான ஆகும்
புத்தகத்தை எடுத்திட்டு வா படிக்கலாம் என
அதிகார தொனியில் ஆறுதல் கூற
ஒரே ஒரு சகோதரனோ சகோதரியோ
எனக்கும் இருந்திருந்தால்......
உறைந்து போன ஆசை !!
தனித்திருக்க விடாமல்
தன்னுள் இருக்கும் தனித்திறமையை
கண்டறிய ஓயாமல் என்னை உந்தித்தள்ளி
பிடித்த துறையில் பற்று கொண்ட பின்
திறம்பட என்னை மேம்படுத்த
பெற்றோரிடம் அதற்கு பரிந்துரைத்து
மற்றோரிடம் மெய்மறந்து என்னை பாராட்டி
துவண்ட பொழுதெல்லாம் தூக்கிவிட்டு
தூற்றுவோரை தூரம் தள்ளிவைத்து
ஏமாறும் பொழுதெல்லாம் ஆசுவாசப்படுத்தி
ஏற்றம் காண வழிவகுத்து
வெற்றியின் பக்கத்தை நானும் பார்க்கும் நொடி
களிப்பில் கண்கலங்கி என்னை கட்டியணைக்கவும்
இல்லை தோல்வியெனில்
விடுடா அடுத்த தடவ பார்த்துக்கலாம்
என அதே பாசத்துடன் கட்டியணைக்கவும்
ஒரே ஒரு சகோதரனோ சகோதரியோ
எனக்கும் இருந்திருந்தால்......
உறைந்து போன ஆசை
தன்னுள் இருக்கும் தனித்திறமையை
கண்டறிய ஓயாமல் என்னை உந்தித்தள்ளி
பிடித்த துறையில் பற்று கொண்ட பின்
திறம்பட என்னை மேம்படுத்த
பெற்றோரிடம் அதற்கு பரிந்துரைத்து
மற்றோரிடம் மெய்மறந்து என்னை பாராட்டி
துவண்ட பொழுதெல்லாம் தூக்கிவிட்டு
தூற்றுவோரை தூரம் தள்ளிவைத்து
ஏமாறும் பொழுதெல்லாம் ஆசுவாசப்படுத்தி
ஏற்றம் காண வழிவகுத்து
வெற்றியின் பக்கத்தை நானும் பார்க்கும் நொடி
களிப்பில் கண்கலங்கி என்னை கட்டியணைக்கவும்
இல்லை தோல்வியெனில்
விடுடா அடுத்த தடவ பார்த்துக்கலாம்
என அதே பாசத்துடன் கட்டியணைக்கவும்
ஒரே ஒரு சகோதரனோ சகோதரியோ
எனக்கும் இருந்திருந்தால்......
உறைந்து போன ஆசை
பருவ வயசுல பாதையை மாற்றி
வேகத்தை கூட்டி விவேகத்தை குறைக்கும்
வீண் வாய்ப்புகளின் விளிம்பில் நான் நிற்க
ஹார்மோன் மாற்றத்தால் கவனத்தை சிதறடிக்க
உடலிலும் உள்ளத்திலும் மாற்றத்தை தந்து
காலம் அதனது சூழ்நிலையை அமைக்கும்போது
என்மீது தொற்றிக்கொண்டு என்னுடன் உறவாட
அடம்பிடித்தலும் அஜாக்கிரதையும்
யோசனையின்மையும் நொடிப்பைத்தியக்காரத்தனமும்
முன் வந்து முன் வந்து குத்தாட்டம் போட
மதி மயங்கி நானும் விழும் வேளையிலே
கண்மூடி கண்டிக்கும் பெற்றோர் சாயலுமின்றி
செவிசாய்த்து உடனிருக்கும் நண்பனின் சாயலுமின்றி
உள்ளபடியே கண்டித்து நல்லபடியே தெளிவுரைக்கும்
ஒரே ஒரு சகோதரனோ சகோதரியோ
எனக்கும் இருந்திருந்தால்........
உறைந்து போன ஆசை !!
கையோடு கை கோர்த்து நடந்து
கட்டியணைத்து உறங்கி பின்
தோள் மேல் தோள் போட்டு
கிடுகிடுன்னு வளர்ந்த பின்
கல்யாண வயசு வந்திடுச்சு
இன்னுமா சண்ட போடறீங்க
என எவரேனும் எதார்த்தமா சொல்ல
பதார்த்தமா வீட்டில பொருத்தம் பார்க்க
சீக்கிரமா கல்யாணம் பண்ணிட்டு போ
அப்பத்தான் எனக்கு நிம்மதி - என
கேலி பேசி என்னை வெறுப்பேத்தியே வர
திருமண நாளும் ஒருநாள் வர
மணமேடையில் மஞ்சள் கயிறை கட்டும்போது
கசிந்தே பழக்கப்படாத தன் கண்களின் ஓரத்தில்
கண்ணீர் சிந்தி யாரும் பார்க்கும் முன் துடைக்கும்
ஒரே ஒரு சகோதரனோ சகோதரியோ
எனக்கும் இருந்திருந்தால்......
உறைந்து போன ஆசை !!
இந்நாளும் எந்நாளும்
சுகமோ துக்கமோ
நன்மையோ தீமையோ
ஏற்றமோ இறக்கமோ
எது நடப்பினும்
மனங்களை பகிர்ந்துகொண்டு
அனுதினமும் என்னை நினைந்திருக்க
ஒரே ஒரு சகோதரனோ சகோதரியோ
எனக்கும் இருந்திருந்தால்.....
உறைந்து போன ஆசை !!
💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛
[இக்கவிதையை பற்றிய உங்களது மேலான கருத்துகளை கீழ் உள்ள Comment-இல் கொடுக்கவும்]