இப்பதிவினுக்குள் செல்வதற்கு முன்னால் மலையேற்றம் பற்றிய முன்னுரையை கீழ் உள்ள இணைப்பில் சென்று படித்து விட்டு வரவும்.
இதற்கு முன்னால் சென்ற சென்னிமலை மலையேற்றம் ஒரு சிறந்த அனுபவத்தை எனக்கு கொடுத்து இருந்தாலும் பாதை தார் பாதையாக இருந்ததால் பயணம் எளிதாக இருந்தது. மழையும் பெய்து வெயிலில் இருந்து காத்தது. அதற்கு எதிர்மாறாக இம்முறை கரடுமுரடான பாதையையும் ஏறு வெயிலையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. செங்குத்தாக இருந்த மலைப்பாதையும் எங்கள் பயணத்தை கடினமாக்கியது. மலையேற்றத்தின் கடினமான பக்கத்தை மாணவர்களுக்கும் எங்களுக்கும் காட்டிய பயணமாக இது அமைந்தது.
மலையேறும் வழியில் அப்பகுதிவாழ் மக்களை எதிர்கொள்ளும் வாய்ப்பு அமையப்பெற்றது. 20 வயது நிரம்பிய கல்லூரி மாணவர்களும் மாணவிகளும் நடக்க சிரமப்பட்டு அவ்வப்போது ஓய்வெடுத்து மலையேற வயதான பூர்விக மக்களோ தலையில் விறகையும் கையில் மற்ற பண்டங்களையும் தாங்கி கொண்டு எளிதாக ஏறினர். மற்றவர்கள் இதனை வியப்புடன் பார்க்க என் மனதில் சட்டென்று ஓடிய யோசனை என்னவென்றால் இப்படி மலை ஏறியும் இறங்கியும் தினமும் நடந்தால் மருத்துவமனை, மருந்தகம், மருத்துவ காப்பீடு போன்றவை எல்லாம் நகர வாழ் மக்களுக்கு எதற்காக தேவைப்பட போகிறது என்றுதான்.
பசுமை வெளியினுக்கோ அல்லது நாம் இதுவரை கண்டிராத பகுதிக்கோ செல்லும்போது அதனை ஒவ்வொரு அணுவாக ரசிக்காமல் தனியாகவும் குழுவாகவும் நின்று விதம் விதமாக புகைப்படம் எடுத்துக்கொள்வதை மட்டும் குறியாக கொண்டிருக்கும் பழக்கம் அனைவரிடத்திலும் தொற்றி கொண்டிருப்பதை ஒவ்வொரு முறையும் காண நேரிடும் பொழுது கோபத்தை விட பரிதாபப்படத்தான் வேண்டியிருக்கிறது. மனதை வளமாக வைத்துக்கொள்ளும் பணியில் நவீன சாதனங்கள் உதவாது என்பதையும் இயற்கையும் அதனை புரிதலும் மட்டுமே மனதை பசுமையாக வைத்திருக்கும் என்பதையும் இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்வது நலம்.
மலையேற்றம் செல்லும்போது அனைவருக்கும் மதிய உணவை எடுத்து சென்று மலையேற்றம் முடிந்து கல்லூரி பேருந்துக்கு திரும்பும் மாணவர்களுக்கு பரிமாறுவது வழக்கம். அதுபோலத்தான் இம்முறையும் தக்காளி சாதத்தை எடுத்து சென்றோம். இம்முறை மலையேற்றம் சற்று கடினமாக இருந்ததால், பயணம் முடிந்து பேருந்துக்கு திரும்பிய மாணவர்கள் சாதாரண சுவையுடன் இருந்த தக்காளி சாதத்தை மிகவும் அனுபவித்து உண்ட பொழுது வெளிப்பட்டது கடின உழைப்பின் மதிப்பும் மகத்துவமும்.
தனிப்பட்ட முறையில், இப்பயணத்தில் இளநிலை மாணவர்களை திறம்பட வழிநடத்தியத்தின் மூலம் தலைமை பண்புக்கான பொருள் என்ன என்பதை நானும் என் நண்பர்களும் உணர்ந்து கொண்டோம்.
மகிழ்வான மலையேற்றம் 2 : சித்தேஸ்வரன் மலை |
Pleasant Trekking : Sitheswaran Temple |

No comments:
Post a Comment