Sunday, December 2, 2018

தொடுவானம்

SKYLINE தொடுவானம்

 💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛

தரிசு[நிலம்] தான்போல ஓர்நிலையே கொள்ளாமல் 
எந்நிலையும் ஏற்றிட களிமண்நிலமாயிரு.....

குட்டை[நீர்] சாயலாகி குழம்பித் தேங்காமல் 
வழிகொண்டு விரைந்தோட நதிநீராயிரு.....

செயற்கை[காற்று] பெறலாகி உயிர்பிணிகளை உள்ளிடாமல் 
உயிர்ஈந்து உழைக்க மூச்சுக்காற்றாயிரு.....

படரும்[நெருப்பு] எரிதலாகி எங்கும் இருளாக்காமல் 
வாழ்வுதனை வெளிச்சமாக்க சுடர்விடும்நெருப்பாயிரு.....

நெடு[வானம்] நில்லாமல் நீள்வது இயல்பே 
உன்முயற்சிக்கு அதுதானே தொடுவானமே.....

 💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛


Your Comments are Most Welcome ! 
Follow Me @ FaceBook !!

No comments:

Post a Comment