Sunday, March 3, 2019

மகிழ்வான மலையேற்றம் 7 : கொடைக்கானல்

இப்பதிவினுக்குள் செல்வதற்கு முன்னால் மலையேற்றம் பற்றிய முன்னுரையை கீழ் உள்ள இணைப்பில் சென்று படித்து விட்டு வரவும். 


ஊட்டியை அடுத்து, பெரும்பாலான கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் செல்லும் சுற்றுலா இடமாக தமிழ்நாட்டில் அமைய பெற்றிருப்பது கொடைக்கானல்.

சுற்றுலாவிற்காக பலமுறை கொடைக்கானல் வந்து இருந்தாலும், மலையேற்றத்திற்காக வந்த இப்பயணம்தான் மனதிற்கு பிடிக்கும் வகையிலும் தரமான பயணமாகவும் அமைந்தது. 

கொடைக்கானலில் இறங்கி எது இலக்கு என்பதை நிர்ணயித்து கொண்டு அதை அடைவதற்கு வெகு வேகமாக பயணித்தோம் நானும் மாணவர்களும். ஒரு சமயத்தில் வழி செங்குத்தாக போக பயணம் வேகம் இழந்தது. அச்சமயம் அப்பகுதி வழிகாட்டி ஒருவரும் இணைந்து கொள்ளவே அவருடன் அளவளாவிக்கொண்டே  பயணம் தொடர்ந்தது. கொடைக்கானல் வாழ் மக்கள் தங்களது வாழ்வுக்காக படும் சிரமங்கள் அவர்களுடைய பொருளாதார நிலை மற்றும் அவர்களுடைய வாழ்வியல் முறை இவை அனைத்தையும் பற்றி விரிவாக எடுத்து சொல்லினார் அவ்வழிகாட்டி. அவ்வினாடி எம்மனதில் தோன்றியது இதுதான் 

"கொடைக்கானலின் ஒருபுறம், வாழ்க்கையை ஒரு போராட்டமாக எதிர்கொண்டு வாழ்வாதாரத்திற்கு ஏதேனும் ஒரு வழி கிடைக்காதா என தவிக்கும் கொடைக்கானல் வாழ் மக்கள். கொடைக்கானலின் மறுபுறம், ஏதேனும் ஒரு வசதியான காரணத்தை வைத்துக்கொண்டு சுற்றுலா வந்திருக்கும் தமிழ்நாட்டு சுற்றுலா வாசிகள் மற்றும் வாழ்க்கை என்றால் இதுதான் இப்படித்தான் வாழ்வோம் என தெளிந்ததோர் பார்வை  கொண்டுள்ள ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா வாசிகள்". இம்மாதிரியான வசதியான காரணமும், வெளி உலக வாழ்க்கை புரிதலும் கொடைக்கானல் வாழ் மக்களின் உழைப்பையும் வறுமையையும் அடைய முடிவதில்லை. இதுதான் நடைமுறை எதார்த்தமும் கூட. வாழ்வாதார போராட்டத்துக்கு முன் வேறு எதுவும் பெரிதல்ல ஒப்பிடக்கூடியதும் அல்ல. 

பயணம் தொடர்ந்தது. ஆங்காங்கே வெளிநாட்டு மக்களை கண்டதும் புகைப்படம் எடுக்கும் பழக்கம் எங்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்களும் நம் ஆட்கள் யாரேனும் புகைப்படம் சேர்ந்து எடுத்துக்கொள்ள அனுமதி கேட்டால் அதற்கு இசைந்து சரி என சொல்வதை ஒரு மரபாகவே பாவிக்கின்றனர் போலும். 

இறுதியில், மூச்சிரைக்க இலக்கை அடைந்து தேவைக்கும் அதிகமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு பயணத்தை நிறைவு செய்தோம். 

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

Pleasant Trekking : Kodaikkanal

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

Pleasant Trekking : Kodaikkanal

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

Pleasant Trekking : Kodaikkanal

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

மகிழ்வான மலையேற்றம் 7 :  கொடைக்கானல்

No comments:

Post a Comment